News April 18, 2025
தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News July 11, 2025
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18 அன்று காலை 10 – 2 மணி வரை நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த <
News July 10, 2025
தென்காசி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தென்காசி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News July 10, 2025
குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் மிகவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா வருகின்ற ஜூலை 19ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.