News April 19, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 7, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய வாக்காளர் விண்ணப்பிக்க மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய சிறப்பு முகாம் 10.01.2026 அன்று   நடைபெறவுள்ளது. முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்படலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 7, 2026

தென்காசி: நாய்களை வைத்து வேட்டையாடிய நபர்கள்

image

ஆய்க்குடி  அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில்  தோட்டத்தில் நாய்களை வைத்து வேட்டையாட முயற்சித்த போது (ஜனவரி.07) இன்று சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு தங்களின் தவறை ஒப்புக்கொண்டதால் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், அவர்களுக்கு ரூ.1,10,000 இணக்க கட்டணம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

News January 7, 2026

தென்காசி: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

image

தென்காசி மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!