News December 31, 2024

தென்காசி மாவட்ட காவல்துறையின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

image

தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் ஒரு சில அறிவுரைகளையும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்

Similar News

News March 1, 2026

தென்காசி: வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டி- VCK

image

சிவகிரியில் நேற்று அம்பேத்கர் முழு உருவச் சிலையை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டியிடுவோம் எனவும், கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகவும் கூறினார். மேலும் OPS வருகையால் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி வலுப்பெறும் எனவும், விஜய் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

News March 1, 2026

கடையம் அருகே மளிகை கடை வியாபாரி தற்கொலை

image

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (65). மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

தென்காசி: இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

image

ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (30). இவர் ஆலங்குளம் பஜார் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகவில்லை. வியாபாரத்தில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷம் குடித்து மயங்கிய அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!