News May 7, 2025
தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.
Similar News
News February 23, 2026
தென்காசி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News February 23, 2026
தென்காசியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 23, 2026
தென்காசி: கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குட்டித்தாய் (58). இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


