News April 17, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News May 7, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 01.05.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

News May 7, 2025

செங்கோட்டை – நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

செங்கோட்டை – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

இலஞ்சி கோயிலில் சித்திரை கொடியேற்ற விழா

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி வரலாற்று சிறப்புமிக்க திருவிளஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களை மிக முக்கிய திருவிழாவான சித்திரை பெரும் திருவிழா இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!