News April 9, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 19, 2025
சங்கரன்கோவிலில் ராணுவ வீரர் பலி

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அழகாபுரி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 35). இவர் ராணுவ வீரர். இவர் நேற்று (செப் 18) மானூர் அருகே சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 19, 2025
தென்காசி- குருவாயூர் ரயில் சேவையில் நாளை மாற்றம்

சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக மதுரை – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16 327) நாளை 20ஆம் தேதி கொல்லம் முதல் குருவாயூர் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. கொல்லத்துடன் இந்த ரயில் நிறுத்தப்படும். திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போது நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.