News April 25, 2025
தென்காசி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. எனவே ஆடுகள் வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
Similar News
News April 26, 2025
கடையம்: சாலையை சீரமைக்க ரூ.2 கோடியே 72 லட்சம் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் முதல் ராமநதி டேம் வரை சாலையானது சிதலமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று 2 கோடியே 72 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கும் மேலும் 1 கோடியே 58 லட்சம் மதிப்பில் மழையால் பாதிக்கப்பட்ட கரையை சீரமைக்கவும் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
News April 26, 2025
தென்காசியில் கால்நடை தடுப்பூசி முகாம் ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின்கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 2025 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.