News April 2, 2024

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 நேரத்திற்கு..!

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2025

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

image

ஆலங்குளம் எஸ்ஐ சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ராசையா மகன்கள் இசக்கிமுத்து(26), கருத்தப்பாண்டி(22) என்பதும், அவர்கள் 2 வாள்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. SI விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

News April 19, 2025

யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

image

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.

News April 19, 2025

தென்காசி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

error: Content is protected !!