News May 17, 2024

தென்காசி: மழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தென்காசியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 16, 2025

தென்காசி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

தென்காசி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY பண்ணுங்க

image

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தென்காசி: இலவச மருத்துவ முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் வெள்ளாளன்குளம், விவேகானந்தா கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 18.12.2025 (வியாழன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதில் பொது மருத்துவம், எழும்பியல், மகப்பேறு, மகளிர் நலம், குழந்தை நலம் , தோல், பல், கண், காது , தொண்டை, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு.

error: Content is protected !!