News August 7, 2024
தென்காசி மக்கள் தொடர்பு அலுவலர் திடீர் இடமாற்றம்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி இன்று (ஆக.07) அதிரடியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இடமாற்றம் செய்து செய்தி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட
புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்புக உள்ளார்.
Similar News
News December 10, 2025
தென்காசியில் 190 பேர் கைது

தென்னாசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் கூட்டமைப்பு சாபிளில், நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் பூரணம் தலைமை வகித்தார். அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உதவியாளர்கள் வேண்டும், கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீடிரென தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 190 பேரை போலீஸார் கைது செய்தனர்.
News December 10, 2025
தென்காசி: கம்மி விலையில் கார், பைக் வேணுமா??

ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025ம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94884-88933, 78688-61828 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News December 10, 2025
தென்காசியில் குடிநீர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் 7397 389 953 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும். இத்தகவலை நகர்மன்ற உறுப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


