News April 9, 2025

தென்காசி : பூச்சி கடித்து மூதாட்டி பலி

image

கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 24, 2025

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

image

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

தென்காசியில் இத்தனை படங்கள் எடுக்கப்பட்டதா?

image

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
▶️முதல்வன்
▶️ஸ்ரீ பண்ணாரி அம்மன்
▶️தாஸ்
▶️வருஷமெல்லாம் வசந்தம்
▶️வேலை கிடைச்சுடுச்சு
▶️அண்ணன் காட்டிய வழி
▶️ஓ மானே மானே
▶️செவத்தப் பொண்ணு
▶️பூமணி
▶️ராஜ ராஜேஸ்வரி
லிஸ்டில் வராத உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் செய்து , நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 24, 2025

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!