News March 28, 2025
தென்காசி: பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்

தென்காசி மாவட்டத்தில் திருக்குற்றாலநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், தென்பழனி ஆண்டவர் கோயில், சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில், சாயமலை உமையொருபாகேஸ்வரர் கோயில், தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில், சாம்பவர் வடகரை மதுரவாணி அம்பாள் கோயில், வைத்தியலிங்கம் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயிலாகும். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 20, 2025
தென்காசி: போக்சோ கைதி சிறையில் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 20, 2025
தென்காசி: SIR உதவி எண்கள் வெளியீடு

SIR படிவம் பூர்த்தி செய்வது குறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – 04633 210074, 04633-1950, தென்காசி சட்டமன்றத் தொகுதி -04633-222212, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி-04633-245666, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி 04633-270899, 9944096957, சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி 04636223030, வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி-04636-250223 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.
News November 20, 2025
தென்காசி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://tenkasi-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க.


