News April 16, 2025
தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
Similar News
News November 22, 2025
தென்காசி: அரசு பள்ளியில் 30 லேப்டாப்கள் திருட்டு

கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஒரு அறையில் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாரிகள் அந்த அறையை திறந்த போது, அந்த அறையில் இருந்த ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு 30 லேப்டாப்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
News November 22, 2025
தென்காசியில் இருந்து பிரிந்த 12 ஊராட்சிகள் இதோ…

குருவிக்குளம் யூனியன் பகுதியில் இருந்த இருந்த 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியுடன் இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேர, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்துள்ளது.
News November 22, 2025
தென்காசி: கடன் வசதி பெற ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியன வேளாண் உட்கட்டமைப்பு நிதி எனும் திட்டம் மூலம் கடன் வசதி பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல் அளித்துள்ளார்.


