News April 14, 2024

தென்காசி: தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

image

தென்காசி கலெக்டர் கூட்ட அரங்கில் இன்று தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நயன் தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ் குருமூர்த்தி, தென்காசி எஸ் பி சுரேஷ்குமார் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News October 31, 2025

குற்றாலத்தில் கடைகள் ஏலம் அறிவிப்பு

image

குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரருவிப் பகுதியில் சந்தனம் குங்குமம் தற்காலிக கடை அமைத்திட நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 முடிய உள்ள கால அளவிற்கு அனுபவித்து கொள்ளும் பொருட்டு நிபந்தனைகளுக்குட்பட்டு குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 07-ம் தேதி (07.11.2025) வெள்ளிக்கிழமை ஏலம் நடத்தப்படும்.

News October 31, 2025

தென்காசி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News October 31, 2025

தென்காசி: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் – கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 3.11.2025 மற்றும் 4.11.2025 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!