News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News November 11, 2025
தென்காசி: விமானத்தில் பணிபுரிய பயிற்சி – ஆட்சியர்

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
தென்காசி: முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ரேணுகா என்பவர் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் பொறுப்பேற்று கொண்டார்.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு – தென்காசியில் வாகன தணிக்கை

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் உள்கோட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவீர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


