News April 9, 2025

தென்காசி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜிப்லி செயலி மூலம் ஆபத்துகளை பயனாளர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது மேலும் பயனாளர்கள் தங்களது பயோமெட்ரிக் AI செயலியுடன் தங்களது தரவுகளை வழங்குகிறார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இச்செயலி மூலம் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் குற்றங்களுக்கு ஆளாகும் என போலீசார் எச்சரிக்கை*ஷேர்

Similar News

News December 3, 2025

தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

image

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த 6 கிலோ மீட்டர் சுற்றளவில் கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அன்னதானம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க…

News December 2, 2025

குழந்தை தொழிலாளர் பணி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம், 1986-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணி அமர்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

தோரணமலை முருகன் கோயில் கிரிவலம் தேதி அறிவிப்பு

image

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத பௌர்ணமியொட்டி நாளை டிசம்பர் 4 ந்தேதி காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!