News November 23, 2024
தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
தென்காசியில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன்அய்யசாமி தென்காசி பகுதிக்கான UDAN
(உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) விமான நிலையம் அமைக்க வேண்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தராம்மோஹன் நாயுடு கிஞ்சராப்பு – இடம் டெல்லியில் நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு வழங்கினார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 23, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனிமொழி எம்பி வருகை

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வரும் டிசம்பர்.28ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருகை தருவதை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
News December 23, 2025
தென்காசி: ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு

AAY மற்றும் PHH அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் அல்லது தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலை கடையிலையும் 31/12/2025 க்குள் கைரேகை பதிவு செய்யுமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


