News April 1, 2025

தென்காசி: கடன் தொல்லை தீர்க்கும் கோயில் 

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மலை உச்சியில் ஒக்க நின்றான் பொத்தையில் ராமர் சீதாதேவி அருள்பாலிகின்றனர். சீதாதேவியை தேடி, ராமன் ஒற்றை காலில் நின்று சீதையைத் தேடி நின்ற பகுதிதான் ஒக்க நின்றான் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. *கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணவும்*

Similar News

News April 4, 2025

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்

image

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்த நிலையில், இன்று நடந்த மறுவிசாரணையில் தமிழக அரசின் வாதத்தை ஏற்று, தடை நீக்கப்பட்டு குடமுழக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் புணராமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் ,கணபதி ஹோமம் முடிந்த நிலையில் குடமுழுக்கு நிறுத்துவது ஏற்கத்தக்கல்ல என தமிழக அரசு விளக்கம்.

News April 4, 2025

கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று  (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.

News April 4, 2025

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

இன்று (ஏப்ரல்4)  நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட  என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.(ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!