News November 23, 2024

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

image

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(நவ.,22) மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி ஆய்வினை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உடனிருந்தார்.

Similar News

News December 5, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 5, 2025

தென்காசி: டிச.06 இங்கெல்லாம் கரண்ட் கட்!

image

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் செய்தி குறிப்பு. தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 06.12.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 5, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.4 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!