News April 10, 2025
தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News October 19, 2025
தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசியில் 99 மி.மீ., ஆய்க்குடியில் 96 மி.மீ., செங்கோட்டையில் 96 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 88 மி.மீ., சிவகிரியில் 75 மி.மீ., ராமநதியில் 86 மி.மீ., மழை பதிவானது. 36 அடி உயரமுள்ள செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
News October 19, 2025
தென்காசி: கட்டட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி

செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கோட்டையில் உள்ள வீட்டில் கட்டுமான பொருட்கள் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் இடிபாடுகளில் சிக்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News October 19, 2025
குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.