News January 22, 2025

தென்காசியில் 24ஆம் தேதி சலூன் கடைகள் முழு அடைப்பு போராட்டம்

image

தென்காசி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன்,பொருளாளர் முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் வரும் 24ஆம் தேதி முடிதிருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடி அடைப்பு செய்து போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.

Similar News

News January 6, 2026

ஜவுளி தொழில் மாநாடு – பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

image

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் “International Textile Summit-360* என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30   கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதுவிபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 8220017071, 8220656182 தென்காசி மாவட்டஜவுளித் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தகவல்

News January 6, 2026

செங்கோட்டையை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பெருமிதம்

image

எனது தந்தை பேருந்து நடத்துனர், தாய் பீடி சுற்றும் தொழிலாளி. நான் முதல்வன் திட்டத்தில் பயன் பெற்று IPS தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஒரு அதிகாரியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். என்னால் முடிந்தது என்றால், உங்களாலும் முடியும் என்று உலகம் உங்கள் கையில் எனும் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவில் செங்கோட்டையை சேர்ந்த இளம் IPS அதிகாரி இன்பா பேச்சு.

News January 6, 2026

தென்காசி: சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? CHECK

image

தென்காசி மக்களே, <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் நிறுவன படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவிட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!