News April 12, 2025
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்துக்கல் வலசையில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
Similar News
News December 5, 2025
தென்காசி: ரவுடியை பிடிக்க சென்று சிக்கிய போலீசார்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகனை பிடிக்க நேற்று (டிச.4) இரவு சென்ற போலீசார் மலையில் ஏறிய போது, மேலே செல்ல முடியாமல் நடுப்பகுதியில் 5 போலீசார் சிக்கி தவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு போலீசாக மீட்கப்பட்டனர். இதனை பயன்படுத்திய பாலமுருகன் அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
தென்காசி: 10th போதும்.. அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News December 5, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்த சுடலை மகன் சர்வேஷ் (3). நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக அங்கிருந்த மின்மோட்டார் ரூமுக்கு சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையம் போலீஸார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


