News May 10, 2024
தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
தென்காசி: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

தென்காசி மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
News November 7, 2025
தென்காசி: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News November 7, 2025
குற்றாலம்: டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.


