News March 20, 2024
தென்காசியில் தேர்தல் முன்னேற்பாடு பணி

வீ.கே.புதூர் வட்டம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) தென்காசி கோட்டாட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO’s) தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
Similar News
News October 15, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 அன்று S.வீராசாமி செட்டியார் பொறியியற் கல்லூரி, புளியங்குடியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் விவசாய கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் அளித்துள்ளார்.
News October 15, 2025
தென்காசி: வனச்சரகம் தொடர்பாக எண்கள் அறிவிப்பு

தென்காசி வனச்சரகம் தென்காசி வனக்கோட்டம் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குடிப்பது மது அருந்துவது புகைப்பிடிப்பது நெருப்பு மூட்டுவது குப்பைகளை போடுவது வேட்டையாடுவது வேட்டையாட முயற்சிப்பது வனச் சட்டத்தின் படி குற்றமாகும்மேலும் விவரங்களுக்கு தென்காசி வனச்சரக அலுவலரின் கைபேசி எண்ணிற்கு 9786932520 தொடர்பு கொள்ளலாம். அலுவலகம் 04633 233660 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட மக்களே வருகின்ற 20/10/2025 தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.