News April 6, 2025
தென்காசியில் ட்ரோன்கள் பறக்க தடை

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
தென்காசி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தென்காசி மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.
News December 1, 2025
தென்காசியில் விண்ணை தொட்ட மல்லிகை பூ விலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் சந்தைக்கு வருகின்றன. முகூர்த்த நாள் மற்றும் கேரளாவுக்கு அதிக ஏற்றுமதி காரணமாக, மல்லிகைப் பூ விலை திடீரென உயர்ந்துள்ளது. சங்கரன்கோவிலில் நேற்று மல்லிகை கிலோ ₹7,500 வரை விற்பனையானது.


