News May 15, 2024
தென்காசியில் குடை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே மே மூன்றாவது வார இறுதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 18, மற்றும் 19ஆம் தேதி தென்காசி மாவட்டம் முழுவதும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஏற்கனவே சிவகிரி வட்டாரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 13, 2025
தென்காசி: அரசு சான்றிதழுடன் இலவச தொழிற் பயிற்சி

தென்காசி மாவட்டம் இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்தும் சுயதொழில் கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மத்திய அரசு சான்றிதழுடன் இன்று இலத்தூர் ஹைலைட் சிட்டி , தென்காசி மெயின் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க..
News November 13, 2025
செங்கோட்டை – திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் ரத்து

செங்கோட்டை – திருநெல்வேலி வண்டி எண் ( 56742) செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் (நவ-13 முதல் 29) வரை , சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி – செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் ( 56743) திருநெல்வேலி – சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும் . பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 13, 2025
தென்காசியில் கடைகளுக்கு அபராதம்

தென்காசி நகராட்சி 29வது வார்டு சுவாமி சன்னதி பஜாரில் உள்ள கடைகளில் இன்று தென்காசி நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தும் கடைகளில் நெகிழிகள் பயன்படுத்தபடுகிறதா என சோதனை நடந்தது.
சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடந்த இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நெகிழிகள் பயன்படுத்தும் கடைகளுக்கு சுகாதார ஆய்வாளரால் அபராதம் விதிக்கப்பட்டது.


