News August 25, 2024

தென்காசியில் கல்வி கடன் முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயனடையுமாறு இன்று கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

image

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும்,  10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

News December 1, 2025

தென்காசி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

தென்காசி மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

image

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!