News August 4, 2024
தென்காசியில் கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டு அரங்கில் வைத்து நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். இந்த மாதத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு கல்வி கடன் முகாமில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Similar News
News October 19, 2025
தென்காசி மக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

தென்காசி மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News October 19, 2025
தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை அறிவிப்பு

தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 21ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும். இதனால் தென்காசி, திருநெல்வேலி நீலகிரி, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
News October 19, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தென்காசி மாவட்ட மக்களே இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!