News April 2, 2025
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல்-2) நாளை (ஏப்.3) மற்றும் ஏப்ரல் -05 ஆகிய 3 நாள்களுக்கு தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
தென்காசி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

தென்காசி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜா (29). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் செங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தனியாக இருந்த காளிராஜ் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
தென்காசி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட உரிமை கோரப்படாத 133 மோட்டார் வாகனங்கள் 18.12.25 அன்று பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம்விடப்பட உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் 17.12.25 மாலை 4 மணிக்குள் ரூ.3,000/- கட்டி டோக்கன் பெற்றுச் செல்லும்படி தென்காசி மாவட்ட காவல்துறையால் அறிவுறுத்தப்படுகிறது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


