News August 9, 2024
தென்காசியில் ஆக.,16ல் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் குத்துக்கல்வலசையில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் சார்பில் ஆக.,16 ஆம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,8) கேட்டுக்கொண்டார். SHARE IT.
Similar News
News October 28, 2025
தென்காசி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தென்காசி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 28, 2025
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருட்களாக, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஆகியன நடைபெறும் என ஆட்சியர் தகவல்.ஷேர்!
News October 28, 2025
ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல்போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.


