News May 16, 2024
தென்காசிக்கு ரெட் அலர்ட்!

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
தென்காசி மக்கள் திட்டுவதாக புலம்பிய எம்.எல்.ஏ

இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் செயல்படுத்த படவில்லை, சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே என்று திட்டுகிறார்கள் தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்
News November 8, 2025
தொழில் தொடங்க ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்களை தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பொதுப்பிரிவினர் அனைவரும் தொழில் தொடங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல்.
News November 8, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.


