News April 10, 2025
தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.
Similar News
News November 13, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று(நவ.11) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
பாப்பான்குளம் பகுதியில் பிடிபட்ட மலைப்பாம்பு

பாப்பான்குளம் அருகே உள்ள சங்கரநாராயணர் சுவாமி கோவில் அருகே (நவம்பர் 12) இன்று சுமார் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
News November 12, 2025
தென்காசி: ஆசிரியர் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பாவூர்சத்திரத்தில் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிராந்தியில் விஷம் கலந்து கொலை செய்து, தனது வீட்டில் புதைத்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பொன் செல்வி, அவரது தந்தை தங்கப்பாண்டி தம்பி முருகன் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனையும், தடயத்தை மறைத்ததற்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதம் விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


