News March 25, 2025

தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப உதவி தொகை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி தொகையாக கல்வி மற்றும் திருமண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.

Similar News

News November 6, 2025

நாகை: வாய்க்காலில் சடலமாக மிதந்த நபர்

image

கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திமிங்கல புலியூர் பகுதியை சேர்ந்தவர் யாக்கோபு(65). கொத்தனாரான இவர் வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திமிங்கல தெற்கு வெளி சங்கமங்கலம் பாசன வாய்க்காலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 6, 2025

நாகை: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(26). இவர் இன்று காலை புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பிடிப்பதற்கு மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அருண்குமாரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 6, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!

error: Content is protected !!