News June 27, 2024
தூத்துக்குடி: வியாபாரிகளுக்கு திடீர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி டாக்டர் மாரியப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வீரபொம்மு (55). இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது டூவீலரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் இவரது டூவீலரில் மோதியதில் இவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் ராமசுப்பு என்பவரை நேற்று கைது செய்தனர்.
News December 19, 2025
தூத்துக்குடியில் இன்று எங்கெல்லாம் பவர் கட்?

தூத்துக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோச் காலனி, லயன்ஸ் டவுன் பகுதிகள், பெரியகடை தெரு பகுதிகள், பாத்திமா நகர், சண்முகபுரம் பகுதிகள், முனியசாமி புரம், CGE காலனி, சத்யா நகர், பெரியசாமி நகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்ட்டுள்ளது. முழு விவரம் அறிய<
News December 18, 2025
தூத்துக்குடி: இனி Whatsapp மூலம் புகார் அளிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்சார துண்டிப்பு குறித்து மின்வாரியத்திடம் இனி WhatsApp மூலமாக 89033 31912 என்ற எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க


