News January 23, 2025
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை அருகே உள்ளது வாகைகுளம் விமான நிலையம். இந்த விமான நிலையத்திற்கு கடந்த மாதம் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இந்நிலையில் இன்றும் போலீசாருக்கு விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை செய்து வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த டேனியல் மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை வீட்டின் முன்நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் விசாரணையில் சாம்சன் என்பவர் பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
News January 11, 2026
தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 11, 2026
தூத்துக்குடியில் சதி திட்டம்.. 7 பேர் அதிரடி கைது

தூத்துக்குடி வடபாகம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புது பஸ் ஸ்டாண்ட் அருகே 7 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர்கள் சட்ட விரோத செயலுக்கு சதி திட்டம் தீட்டியது தெரிந்தது. இதனை அடுத்து, ஜேம்ஸ் (19), சரண் (23), சிவப்பிரகாஷ் (20), ஜெயக்குமார் (19), சின்னத்துரை (23), சத்குரு (21), சக்திவேல் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


