News April 2, 2025
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எஸ்ஐ முத்தமிழ் ஆகியோர் வழக்கறிஞர் தொழிலுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் 02.04.25 முதல் சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு இன்று வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
திருச்செந்தூர் நெல்லை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து

நெல்லை சந்திப்பு ஆறாவது பிளாட்பார்மில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 11 40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் இன்று முதல் 14, 15, 17, 19, 20, 21, 22, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
தூத்துக்குடி வந்த சட்டமன்ற இணை செயலாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆய்வுக்காக வந்திருந்த தமிழக சட்டமன்ற இணை செயலாளர் ரமேஷ் (57) என்பவர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News November 13, 2025
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி முகாம்கள் ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் முகாம் வரும் 18ம் தேதி வரை அந்தந்த அலுவலகங்களில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறவிருந்த முகாம்கள் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் இளம் பகவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


