News March 29, 2025

தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

image

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.

Similar News

News April 3, 2025

தூத்துக்குடி குச்சி மிட்டாய் சுவைத்து இருக்கிறீர்களா?

image

தூத்துக்குடி என்றால் மக்ரூன் எவ்வளவு பெயர் பெற்றதோ அதைப்போல தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் நெய் குச்சி மிட்டாய் புகழ்பெற்றது. நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்டது. முந்திரிப் பருப்பு நெய் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் குச்சி மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நெய் குச்சி மிட்டாய் தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.

News April 3, 2025

கல்லூரி பேராசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

image

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் மதன்குமார் மீது இன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!