News March 4, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் மற்றும் மணியாச்சி ஆகிய பகுதிகளில் இன்று 03.03.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்கு 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2025
திருச்செந்தூர்: பெரிய பல்லக்கில் அஸ்திரதேவர் உடன் பெலி நாயகர்

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதலாம் திருநாளான நேற்று(03-03-2025) இரவு ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவர் உடன் பெரிய பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி 9 சன்னதிகளிலும் பெலி செய்து பக்தர்களுக்கு திருக்காட்சிளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
News March 4, 2025
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்றைய (4) நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (4) காலை 10 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம் பாறை, கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11 மணிக்கு கீழ பாண்டவர் மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அதன்பின் நாலாட்டின் புதூரில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2025
தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள்

ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிற்கு செல்வோர்கள் அங்கிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி துறைமுக சுகாதார அதிகாரிகளிடம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.