News August 9, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 09.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் எதுவும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இந்த இலவச எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

தூத்துக்குடி: டீக்கடையில் நடத்திய சோதனையில் அதிர்ச்சி

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் பாளை ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டீக்கடை நடத்தி வரும் புதுக்குடியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த மாருதி காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 11, 2026

தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க. இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

தூத்துக்குடி: தனியார் பஸ் மோதி முதியவர் பரிதாப பலி

image

விளாத்திகுளம் அருகே குளத்தூர் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (85). இவர் நேற்று முன்தினம் கீழ வைப்பார் வங்கிக்கு செல்வதற்கு குளத்தூர் பேருந்து நிலையம் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்து கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து தூத்துக்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!