News April 13, 2024
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 81 லட்சத்தி 13,000 மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News December 18, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்கள் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராவை பொருத்துவீர் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பீர் என மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்செந்தூரில் அதிகரித்த கடல் அரிப்பு.. முக்கிய நடவடிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளம் விழுந்த பகுதிகளில் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.


