News April 19, 2025
தூத்துக்குடி மாவட்டம் இரவு நேர ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஏப்18) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள போலீசாரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
தூத்துக்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்.இவரது 21 வயது மகளான லோகேஸ்வரி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் கோவில் புனிதத்தை பாதிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களை பாடுவது, நடனம் ஆடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்றவைகளில் ஈடுபடக்கூடாது. இதனையும் மீறி ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


