News April 27, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

தென் வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவஞானபுரம் 29.2 மிமீ மழையும், சோழபுரம் 13.6 மிமீ மழையும், காடல்குடி 12.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

தூத்துக்குடி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

image

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

தூத்துக்குடி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 95% நிறைவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி நவம்பர் 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் எளிதில் படிவங்களை நிரப்பி தருவதற்கு வசதியாக சிறப்பு முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!