News April 18, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டுகள்

சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.
Similar News
News January 7, 2026
தூத்துக்குடி: புகார் எண் அறிவித்த ஆட்சியர்

பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு தொகை ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாய விலை கடைகள் மூலம் 541007 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகை நாளை முதல் வழங்கப்படும் நிலையில் இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT
News January 7, 2026
தூத்துக்குடி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <
News January 7, 2026
தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி முத்துலட்சுமி அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு முத்துலட்சுமி வீட்டில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை மற்றும் ரூ.4500 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


