News August 6, 2024
தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 06.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News November 11, 2025
தூத்துக்குடியில் கலை போட்டிகள் அறிவிப்பு

கலை பண்பாட்டு துறை வாயிலாக 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான கலைப்போட்டிகள் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குரல், இசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய 4 பிரிவில் கலை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
தூத்துக்குடியில் மீண்டும் அரசு வேலை! 10th தகுதி.. உடனே APPLY

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, ஸ்ரீவை, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம் பகுதியில் கிராம உதவியாளர் பணிகளுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதை அடுத்து விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2025-ஆக உள்ளது. 21 வயது நிரம்பிய 10th படித்தவர்கள்<
News November 11, 2025
தூத்துக்குடி: வியாபாரி தீக்குளித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் உள்ளனர். கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.


