News September 14, 2024
தூத்துக்குடி போலீஸ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதளத்தில் வரும் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள்.
இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு சைபர் குற்றங்களில் சிக்க நேரிடலாம். விழிப்புடன் செயல்படுவீர், சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வீர் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
தூத்துக்குடி: பட்டப்பகல் படுகொலை.. 2 பேர் அதிரடி கைது

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (30). கூலித் தொழிலாளியான இவரை சாத்தான்குளம் மதுபான பார் தொழிலாளர்கள் சுந்தர், ஜெகதீஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நேற்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடியில் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 5,146 பேர் நாளை (டிச.21) தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் காலை 8 – 9.30 மணி, பிற்பகல் 2 – 3 மணிக்கு உள்ளாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். கருப்பு பேனா, ஹால் டிக்கெட், ஏதேனும் அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன் போன்ற எலக்ட்ரிக் சாதனத்திற்க்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.


