News February 16, 2025
தூத்துக்குடி பெற்றோர்களை குறிவைக்கும் சைபர் கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நூதன முறையில் சைபர் மோசடி நடைபெறுவதாக தகவல். மர்மநபர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கால் பண்ணி,’உங்கள் மகன்/மகளுக்கு ஸ்காலர்ஸிப் வந்துள்ளது; வங்கியில் மினிமம் ரூ.5000 இருந்தால், ஸ்காலர்சிப் கிடைக்கும்” என கூறுகின்றனர். இதைநம்பி ரூ.5000-ஐ வங்கியில் செலுத்தியவர்களிடம் OTP ஒன்றை அனுப்பி அந்த பணத்தை திருடுகின்றனர்.*உங்களுக்கு கால் வந்தால் 1930-ஐ(சைபர் கிரைம்) அழைக்கவும்
Similar News
News December 19, 2025
தூத்துக்குடியில் கேரல் ஊர்வலத்திற்கு புதிய ரூல்ஸ்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் டிச.24ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரல் வாகனத்தின் உயரம் 10 அடி மட்டுமே அனுமதிக்கப்படும், கிரேன் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனத்தின் மீது ஏறி பயணிக்க கூடாது. அதிக சத்தம் கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி என எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
News December 19, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வீரபொம்மு (55). இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது டூவீலரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் இவரது டூவீலரில் மோதியதில் இவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் ராமசுப்பு என்பவரை நேற்று கைது செய்தனர்.


