News April 5, 2025
தூத்துக்குடி: பூட்டிய வீட்டில் நகை திருட்டு

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு குமரன் நகரை சேர்ந்தவர் ரத்தினம் (66).இவர் மார்ச் 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூருக்கு சென்றார். நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 3 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த முருகன்(31) நகையைத் திருடியது தெரிய வந்தது. முருகனை கைது செய்து போலீசார் நகையை மீட்டனர்.
Similar News
News April 6, 2025
தூத்துக்குடி ஆட்சியர் ஹெல்த் வாக்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று பொதுமக்கள் ஆரோக்கியத்தை பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 8 கிலோ மீட்டர் தூரம் ஹெல்த் வாக் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் சுகாதார பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News April 6, 2025
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சிபிஎம் கட்சியினர்

தூத்துக்குடி மேல அலங்காரத்தை சேர்ந்த வின்சென்ட் 1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார். இது சம்பந்தமாக நடைபெற்று வந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 9 காவல்துறையினருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனையடுத்து நேற்று உயிரிழந்த வின்சென்ட் இல்லத்திற்கு சென்ற பொதுமக்கள் சிபிஎம் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.
News April 6, 2025
தூத்துக்குடியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மற்றும் பொறியாளர் தொழில்நுட்ப ஆதரவு பிரிவில் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <