News January 24, 2025
தூத்துக்குடி: புதிய வருவாய் அதிகாரி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த அஜய் சீனிவாசன் பணி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய மாவட்ட வருவாய் அதிகாரியாக அ.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக ரவிச்சந்திரன் இன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடியில் தேர்வு தேதி மாற்றம்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper) தகுதிகாண் தேர்வு டிச.13, 14இல் நடைபெற இருந்தது. அது தற்போது 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <
News December 16, 2025
தூத்துக்குடி: திமுக பிரமுகர் கொலை.. 2 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்தவர் மாரி செல்வம். 2015-ல் இவரது வீட்டில் நகை திருட்டில் சிலுவைப்பட்டி திமுக பிரமுகர் ஜேசுராஜ் மகன் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஜேசுராஜிடம் மாரி செல்வமும், அருண் சிங் என்பவரும் கேட்டபொழுது ஏற்பட்ட தகராறில் இருவரும் ஜேசுராஜை வெட்டி கொலை செய்தனர். இது கொலை வழக்கில் மாரி செல்வம் , அருண் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


