News August 14, 2024
தூத்துக்குடி பள்ளிகளுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011க்கும் முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், வரன்முறை அனுமதி இசைவு பெற 31-1-2025 க்குள் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரன்முறை அனுமதி இசைவு சான்று பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
தூத்துக்குடி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

காடல்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கருமுருகன் (25). இவர் விளாத்திகுளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கருமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 8, 2026
தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் ஜன.09க்குள் <
News January 8, 2026
தூத்துக்குடியில் 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கல்!

போதை பொருள் நடமாட்டதை தடுக்க தூத்துக்குடி நகர சரக துணை போலீஸ் எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கோயில்பிள்ளைவிளை, ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மரியநவமணி ஸ்மைலன் (37), மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


