News August 18, 2024
தூத்துக்குடி: படைப்பாளிகளை கெளரவபடுத்திய கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சோ.தருமன், உதயசங்கர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
Similar News
News December 10, 2025
தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்குமார் (27). இவருக்கும் புனிதராஜிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திசையன்விளை ரோடு பகுதியில் புனித ராஜ் அவரது அண்ணன் நாகராஜ் (28) இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வேல்குமாரை உயிரிழந்தார். இதுகுறித்து குலசை போலீசார் வழக்குபதிவு செய்து புனிதராஜ், நாகராஜை தேடி வருகின்றனர்.
News December 10, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் மனு கூட்டம் இன்று (டிச.10) மாவட்ட காவல்அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், காவல் நிலையத்தில் தங்கள் கொடுத்த புகார் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த குறைதீர் கூட்டமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும்.
News December 10, 2025
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


